• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

டி -20 உலகக்கோப்பை- இறுதிச்சுற்று வாய்ப்பை இந்தியா இழந்தது.

ByA.Tamilselvan

Nov 10, 2022

ஆஸ்திரேலியாவில் ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. அடிலெய்டில் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.. இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.. இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி சுமாரான துவக்கம் தந்தது.அதன் பின் அடுத்தடுத்து அவுட்டாகி இந்திய வீரர்கள் அதிர்ச்சி கொடுத்தார். 10 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்தனர். பின் களம் இறங்கிய விராட்கோலி அபாரமாக ஆடி 50 ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசி நேரத்தில் நம்பிக்கை தந்த பாண்ட்யா, 33 பந்தில் 63 ரன் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 168 ரன்கள் எடுத்தது .
இந்நிலையில் 169 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து முதல் ஒவேரில் இருந்து தன் அதிரடி ஆட்டத்தை காட்டியது.இறுதியில் இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் டி -20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிச்சுற்று வாய்ப்பை இந்தியா இழந்தது.