

கோவை டி.ஐ.ஜி Dr. M.S.முத்துசாமி, பங்களா புதூரில் கபாடி போட்டி துவக்கி வைத்து பரிசளித்தார்.
இன்று மாலை கோவை சரக டிஐஜி முனைவர் M.S.முத்துசாமி பங்களாபுதூரில் திருவள்ளுவர் நற்பணி மன்றம் சார்பில் 7 ஆம் ஆண்டு மாநில அளவிலான ஆண்களுக்கான 62 அணிகள் வந்து பங்கு பெற்ற கபாடி போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டாஸ் போட்டு துவக்கி வைத்தார்.
மேற்படி விழாவினை பங்களாபுதூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர். பொதுமக்கள் மற்றும் திருவள்ளுவர் நற்பணி மன்ற நிர்வாகிகள் சார்பில் காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு மடல் வழங்கி சிறப்புரை ஆற்றும் போது, தான் சிறு வயது முதலே கபாடி போட்டியில் ஆர்வம் கொண்டவர் என்றும், கபாடி போட்டி தமிழர்களின் வீர விளையாட்டு என்றும், விழாவில் கலந்து கொள்வதில் மிகவும் பெருமை அடைவதாக கூறி, போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை உயர் பயிற்சியக காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வடுகம். சிவக்குமார் I.P.S மற்றும் சத்தியமங்கலம் காவல் உட்கோட்ட உதவி கண்காணிப்பாளர் ஐமன் ஜமால் I.P.S
மற்றும் பங்களாபுதூர் காவல் ஆய்வாளர் வடிவேல்குமார் ஆகிய அனைவரும் உடன் கலந்து கொண்டனர்.
மேலும் மேற்படி விழாவில் திருவள்ளுவர் நற்பணி மன்ற தலைவர் மனோகரன், செயலாளர் செந்தில்குமார் மற்றும் விழா சிறப்பாக நடக்க காரணமாக இருந்த அனைவரையும் வெகுவாக பாராட்டியும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கி கௌரவித்தார்.
