திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய கட்டுநர் சங்கம் சார்பாக புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றன.
இவ்விழாவின் தலைமையாக சாசன தலைவர் சௌந்தர்ராஜன் மாநில பொருளாளர் அருணாபூபதி மற்றும் சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றன.

தொடர்ந்து அகில இந்திய கட்டுநர் சங்கம் சார்பாக 2025 26 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இந்நிகழ்வில் தலைவராக பொறியாளர் ரபீக், செயலாளராக பொறியாளர் வினோத்குமார், பொருளாளராக பொறியாளர் சிவக்குமார், ஆகியோர் அனைத்து நிர்வாகிகள் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றவுடன் அனைத்து பொறியாளர்களுக்கும் காப்புறுதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கான சான்றுகளை பொறியாளர்களுக்கு வழங்கினர்.