திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வழக்கறிஞர் சங்கம் தலைவராக பாலமுருகன், செயலாளராக அரபுஅலி, பொருளாளராக ராஜேஸ்வரன், துணை செயலாளராக மாதவன், துணை தலைவராக கந்தசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் முன்னாள் தலைவர் பாளையம் முருகேசன் தலைமையில் முன்னாள் செயலாளர் பாலமுருகன், பொருளாளர் பகவத்சிங், துணை தலைவர் கந்தசாமி, துணை செயலாளர் பாண்டியராஜன், தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயந்தி, மூத்த வழக்கறிஞர் செல்வராஜன், சரவணக்குமார், கணேசன், கணேஷ்சுந்தரம், முத்துச்சாமி, தெய்வீகராஜ் , நாகராஜ், சுகுமார், கண்ணன், வசந்தகுமார், வெங்கடேசன், ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று
புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்கள்.




