• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

மனம்மாறிய சூர்யா மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்கள்

சூர்யா கதாநாயகனாக நடிக்கும்
42 ஆவது படத்தின் தொடக்கவிழா நேற்று காலை நடைபெற்றது
பாலா இயக்கும் வணங்கான் படத்தில் சூர்யா நடித்துக் கொண்டிருந்தார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டதுஇப்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு
சிறுத்தைசிவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.
தொடக்கத்தில் அந்தப்படத்தை ஸ்டுடியோகிரின் நிறுவனம் தயாரிக்கவிருந்தது.அதன்பின் தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யுவி கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்று சொல்லப்பட்டது.
ஆனால், கடைசிநேர மாற்றமாக, யுவி கிரியேசன்ஸ் மற்றும் ஸ்டுடியோகிரின் ஆகிய இரு நிறுவனங்களுமே இணைந்து தயாரிக்கட்டும் முடிவாகியுள்ளது
சென்னை இராமாவரத்திலுள்ள அகரம் ஃபவுண்டேசன் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்ற தொடக்கவிழாவில் சூர்யா, இயக்குநர் சிறுத்தை சிவா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்,ஒளிப்பதிவாளர் வெற்றி உட்பட பலர் கலந்துகொண்டனர்.இந்தப்படத்தில் இந்திநடிகை திஷாபதானி நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்