• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சூர்யா குடும்பத்தை புகழும் சூரி!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் நடிகரான சூரி, சூர்யா குடும்பம் ஓராயிரம் குடும்பங்களை வாழ வைக்கிறது என புகழ்ந்து பேசியுள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற வெண்ணிலா கபடி குழு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடியனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் சூரி அதற்கு முன்பாகவே பல படங்களில் ஒரு சில காட்சிகளில் வந்து சென்றிருப்பார்.

இதுவரை காமெடியனாக வலம் வந்து கொண்டிருந்த சூரி இப்பொழுது, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் பட விழாவில் சூர்யா குடும்பம் ஓராயிரம் குடும்பங்களை வாழ வைக்கிறது என புகழ்ந்து பேசியுள்ளார். மேலும் அகரம் பவுண்டேஷன் மூலமாக பல இளைஞர்கள் நல்ல தரமான கல்வியைப் பெற்று பல்வேறு நிறுவனங்களில் உயர்ந்த இடத்தில் உள்ளனர் ஜெய் பீம் படத்தில் இருளர்களின் வாழ்க்கையை கூறியதோடு 3 கிராமங்களையும் தத்தெடுத்து உள்ளார்.

இது சாதாரண விஷயம் அல்ல. திரைப்படங்களில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் சூர்யாவின் குடும்பம் ஓராயிரம் குடும்பங்களை வாழ வைக்கிறது என நடிகர் சூர்யாவின் குடும்பத்திற்கு புகழாரம் சூட்டியுள்ளார் சூரி.