விருதுநகரில் சூரசம்ஹாரம் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை தேசபந்து மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

விருதுநகர் சுப்ரமணிய சுவாமி கோவிலின் முன்பு உள்ள தேசபந்து மைதானத்தில் சூர சம்ஹார விழாவில் முதலாவதாக வீரபாகு பல்லக்கில் வலம் வந்தார், அவரை தொடர்ந்து முருக பெருமான் பல்லக்கில் வந்து சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதனை பார்த்த பக்த கோடிகள் வெற்றிவேல், வீரவேல்,முருகனுக்கு அரோகரா என்று கரகோஷமிட்டனர்.













; ?>)
; ?>)
; ?>)