குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதன் பெருமாள் திருக்கோவிலில் சூரசம்ஹாரம் விழாவில் பக்தர்கள் வழிபாடு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே குன்றக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசண்முகநாத முருகப் பெருமான் திருக்கோவிலில் கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு, சூரசம்கார விழா நடைபெற்றது. முன்னதாக உற்சவர் முருகப்பெருமான் சர்வ அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து நான்குரத வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை அடுத்து மலைக் கோவில் மூலவர் சன்னதியில் இருந்து வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்று கோவில் முன்பு சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. நிறைவாக முருகப்பெருமானுக்கு மகா கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபாடு செய்தனர். கந்த சஷ்டி நிறைவை முன்னிட்டு, நாளை திருக்கல்யாண வைபவமும் தங்க தேரும் உலாவும் நடைபெறுகிறது.