• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தென்கரை அகிலாண்டேஸ்வரி மூலநாத சாமி கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா..!

ByKalamegam Viswanathan

Nov 18, 2023

சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 12ஆம் ஆண்டு சூரசம்ஹார விழா நடந்தது.இவ்விழாவை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை அன்று கணபதி ஹோமத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. அன்று பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தினசரி சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.நேற்று மாலை 4 மணி அளவில் அன்னை பராசக்தியிடம் நாகேஸ்வரன் பட்டர் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 6 மணி அளவில் கோவில் முன்பாக சூரசம்ஹார விழா நடைபெற்றது.அங்கு கூடியிருந்த பக்தர்கள் வெற்றிவேல்முருகா,வீரவேல்முருகா என்று பக்தி கோஷமிட்டனர். மதுரை ஆதித்யா புட்ஸ் நிறுவனம் நிறுவனர் செந்தில் குமார் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார். இன்று காலை 11 மணியளவில் பாவாடை தரிசனம் நடைபெற உள்ளது. மாலை 4 மணிக்கு மேல் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும்.அனைவருக்கும் மாங்கல்ய பிரசாதம் மற்றும்(கல்யாண விருந்து) அன்னதானம் வழங்கப்படுகிறது.விழா ஏற்பாடுகளை பிரதோசம் கமிட்டி செய்திருந்தனர். கோவில் செயல் அலுவலர் பாலமுருகன்,கோவில் பணியாளர்கள், பிரதோசம் கமிட்டியினர் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர்முத்தையா மற்றும் போலீஸார் பாதுகாப்பு செய்திறந். தென்கரை ஊராட்சி சார்பாக கூடுதல் சுகாதாரம் கூடுதல் தெருவிளக்கு குடிநீர் வசதி செய்து இருந்தனர்.