• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சூப்பர்சோனிக் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை

Byமதி

Dec 13, 2021

நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இ‌ந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, உள்நாட்டிலேயே ஏவுகணைகளை தயாரித்து, தொடர்ந்து மேம்படுத்தி சோதனை செய்துவருகிறது.

அந்தவகையில், ஒடிசாவின் பாலசோர் கடற்கரையில் நீர்மூழ்கி குண்டான டார்பிடோவை ஏவ உதவும் தொலைதூர சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

சோதனையின் போது, ஏவுகணையின் முழு வீச்சு திறன் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டார்பிடோவின் வழக்கமான வரம்பிற்கு அப்பால் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த ஏவுகணை அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படையினர் பயன்படுத்தும் வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன், ஹெலிகாப்டரில் இருந்து ஏவக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.