

இன்று ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு, இன்று இரவு சூப்பர் ப்ளூ மூன் எனப்படும் அரிதான நிகழ்வு நடைபெறுகிறது. இதைப் பார்ப்பதற்கு மக்கள் ஆவலுடன் உள்ளனர்.
நிலா பூமிக்கு மிக அருகில் வரும் போது, ‘ப்ளூ மூன்’ அல்லது சூப்பர் மூன் நிகழ்வு என குறிப்பிடப்படுகிறது. இரண்டும் சேர்த்து நிகழ்வது ‘சூப்பர் ப்ளூ மூன்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சமயத்தில் நிலா மிக பெரியதாகவும், மிகப் பிரகாசமாகவும் காட்சியளிக்கும். இந்தாண்டின் மிகப்பெரிய, மிகப் பிரகாசமாக நிலவை இன்று நாம் காணலாம். ஒவ்வொரு ப்ளூ மூனும், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது. கடைசியாக, கடந்த 2021- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘ப்ளூ மூன்’ நிகழ்வு நடந்தது. இரண்டாண்டுகளுக்கு தற்போது தான் ‘சூப்பர் ப்ளூ மூன்’ நிகழ்வைப் பார்க்கவிருக்கிறோம்.
ஒரே மாதத்தில் இருமுறை பௌர்ணமி வருவது ‘ப்ளூ மூன்’ என்றழைக்கப்படுகிறது. ‘ப்ளூ மூன்’ என்றால் நிலா நீல நிறத்தில் காட்சியளிப்பது என்று பொருள் இல்லை. அதேநேரம், தூசித் துகள் காரணமாக, ப்ளூ மூன் ஆரஞ்சு வண்ணத்தில் காட்சியளிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் மூன் மற்றும் ப்ளூ மூன் இரண்டும் சேர்ந்து நிகழ்வது மிகவும் அரிதாகக் கருதப்படுகிறது. இது 10 (அல்லது) 20 ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழும். அடுத்த சூப்பர் ப்ளூ மூனை 2037- ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான் காண முடியும்.
இன்று மாலை சூரியன் மறைந்து, இருளும் வேளையில் இந்த ப்ளூ மூனை காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூப்பர் ப்ளூ மூனை இன்று இரவு 8:37 மணியளவில் காண உகந்த நேரம் எனவும் கூறப்படுகிறது.
ஆங்கிலத்தில் “”Once in a Blue Moon”” என்ற அழகான வாக்கியம் உள்ளது. இதற்கு அர்த்தம் “எப்போதாவது நிகழும் அரிய நிகழ்வு” என்பதுதான். பூமிக்கு மிகவும் அருகில் நிலா வருவது அரிய நிகழ்வு என்பதால் இந்த சொற்றொடர் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான Nயுளுயு இன்று நிகழும் ப்ளூ மூன் குறித்த தகவலை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. அதில், இந்த நிகழ்விற்கு பிறகு, ப்ளூ மூனை 14 ஆண்டுகளுக்கு பிறகுதான் காண முடியும் என்று குறிப்பட்டிருந்தது. அதாவது, இன்று இந்த ப்ளூ மூன் நிகழ்வை தவற விட்டுவிட்டால் 14 வருடங்களுக்கு பிறகு 2037ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மற்றும் மார்ச் மாதத்தில் வரும் அரிய ப்ளூ மூன் நிகழ்வைதான் காண முடியும்.
