• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

Byவிஷா

Apr 20, 2024

தமிழகத்தில் நாளை முதல் மூன்று தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..,
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்றுஓரிரு இடங்களில் இடி, மின்னலுடனும், 21, 22, 23 தேதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 24,25-ல் தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்.
இன்று அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.