சசிக்குமார், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படம் இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது.
எஸ். ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் ,விஜய்சேதுபதி ,லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் படம் இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. முக்கோண காதல் கதையை மையமாக கொண்டு கிராமத்து அடிப்படையில் உருவாகி இருந்த இப்படம் நல்ல வெற்றியை பெற்றது. விஜய்சேதுபதி தற்போது வில்னாக மிரட்ட இப்படம் தான் அடித்தளமிட்டது என்றும் கூறலாம். சிறிய கேரக்டராக இருந்தாலும் சிறப்பாக நடித்து அசத்தியிருப்பார் விஜய சேதுபதி. நடிகர் சூரியின் நகைசுவைக் காட்சிகள் ,பாடல்கள் என அனைத்துமே படத்தின் வெற்றிக்கு உதவியது எனலாம்.
10 ஆண்டுகளை நிறைவு செய்த சுந்தரபாண்டியன்
