தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் இன்று முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை. தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் இன்று முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. நேற்றுடன் ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்படுள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, நேற்று பள்ளிக்கல்வித்துறை, ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.