• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நாளை முதல் ஜூன் 5-ந்தேதி வரை மதுரை ஐகோர்ட்டுக்கு கோடை விடுமுறை

ByA.Tamilselvan

Apr 29, 2022

மதுரை ஐகோர்ட்டு கிளைக்கு நாளை முதல் ஜூன் மாதம் 5-ந் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் அவசர வழக்குகளை விசாரிக்கும் அமர்வு விவரங்களை சென்னை ஐகோர்ட்டு வெளியிட்டுள்ளது.
வருகிற மே மாதம் 5, 6-ந்தேதிகளில் நீதிபதி கள் டி.ராஜா, பரதசக்கர வர்த்தி ஆகியோர் அனைத்து டிவிஷன் பெஞ்ச் வழக்குகளையும் விசாரிக்கின்றனர். டிவிஷன் பெஞ்ச் விசாரணை முடிந்த பின்பு கல்வி, சேவை, கனிம வளங்கள், தொழில்துறை, நிலம் கையகப்படுத்துதல், தொழிலாளர் போன்ற துறை சம்பந்தப்பட்ட வழக்குகளை (வேறுபெஞ்சுக்கு ஒதுக்க ப்படாத வழக்குகள்) நீதிபதி ராஜா விசாரிக்கிறார்.
இதேபோல நீதிபதி பரதசக்கரவர்த்தி, வரி, சுங்கம் மற்றும் மத்திய கலால், சினிமா, மின்வாரியம், வனம் உள்ளிட்ட துறைகள் சம்பந்தப்பட்ட அப்பீல் மனுக்களை விசாரிக்கிறார். நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், அனைத்து கிரிமினல் வழக்குகளையும் விசாரிக்கிறார்.
இதேபோல மே மாதம் 11, 12-ந்தேதிகளில் நீதிபதி கள் கிருஷ்ணகுமார், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் டிவிஷன் பெஞ்ச் வழக்குகளை விசாரிக்கி ன்றனர். பின்னர் இந்த 2 நீதிபதிகளும் தனித்தனியாக முந்தைய நீதிபதிகள் விசாரித்த மனுக்களை விசாரிக்கின்றனர். நீதிபதி தண்டபாணி, கிரிமினல் வழக்குகளை விசாரிக்கிறார்.
மே மாதம் 18, 19-ந் தேதிகளில் நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், ஸ்ரீமதி ஆகியோர் டிவிஷன் பெஞ்ச் வழக்குகளை விசாரிக்கின்றனர். பின்னர் தனித்தனியாக வழக்குகளை விசாரிக்கின்றனர். நீதிபதி தமிழ்செல்வி, கிரிமினல் வழக்குகளை விசாரிக்கிறார்.
மே மாதம் 25, 26-ந்தேதிகளில் நீதிபதிகள் சுரேஷ்குமார், விஜயகுமார் ஆகியோர் டிவிஷன் பெஞ்ச் வழக்குகளை விசாரிக்கி ன்றனர். தனி கோர்ட்டில் கிரிமினல் வழக்குகளை நீதிபதி வேல்முருகன் விசாரிக்கிறார்.
ஜூன் மாதம் 1, 2-ந்தேதிகளில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், விஜயகுமார் ஆகியோர் டிவிஷன் பெஞ்ச் வழக்குகளையும் தனி கோர்ட்டில் கிரிமினல் வழக்குகளை நீதிபதி தாரணி விசாரிக்கிறார்.
நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கும் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரையும் மற்ற வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4.45 மணி வரையும் கோர்ட்டு அலுவலகங்கள் செயல்படும்.
இவ்வாறு ஐகோர்ட்டு பதிவாளர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.