• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திடீரென உருண்டோடிய பேருந்து சக்கரம்

திருப்பூர் மாவட்டம் கள்ளகிணறு அருகே அரசு பேருந்தின் முன் சக்கரம் திடீரென கழன்று ஓடியதால் பயணிகள் அச்சமடைந்தனர் .

நெல்லையில் இருந்து 47 பயணிகளுடன் கோவை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென பேருந்தின் முன்பகுதி சக்கரமானது பேருந்திலிருந்து கழன்று தனியாக பேருந்துக்கு முன் ஓடியது.

இதை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சக்கரமானது அரை மைல் தொலைவு வரை சென்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி கீழே விழுந்தது.

சக்கரம் தனியாக கழன்று ஓடியதை கண்ட பேருந்து ஓட்டுனர் காமராஜ் ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தி பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். இதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து பல்லடம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து கழக அதிகாரிகள் நடுவழியில் சிக்கித் தவித்த 47 பயணிகளையும் மாற்று பேருந்து மூலம் ஏற்றி கோவைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் பாதி வழியில் விபத்தாகி நின்ற பேருந்தை போக்குவரத்து கழக அதிகாரிகள் கிரேன் மூலம் அப்புறப் படுத்தி போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் சீர் செய்தனர்.