

ஸ்ரேயாவின் கணவர் ஆண்ட்ரோ கோஸ்சீவ்வுக்கு திடீரென அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா. தொடர்ந்து மழை, சிவாஜி, கந்தசாமி, அழகிய தமிழ்மகன், திருவிளையாடல் ஆரம்பம், தோரணை உள்பட பல படங்களில் நடித்துள்ளார் ஸ்ரேயா. மேலும், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நடித்துள்ளார். அப்போது, ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது!
இந்நிலையில், ஸ்ரேயாவின் கணவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஸ்ரேயா, மருத்துவமனை டாக்டர்களுக்கும் நடிகர் ராம் சரணின் மனைவி உபசனாவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படமான த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமான த்ரிஷ்யம் 2 இந்தி ரீமேக்கில் ஸ்ரேயா நடிக்கிறார். த்ரிஷ்யம் 2 படத்தில் அஜய் தேவ்கன், தபு மற்றும் இஷிதா தத்தா ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை அபிஷேக் பதக் இயக்குகிறார்.
