தமிழக அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் சந்தேகத்துக்குரிய அரசு அலுவலகங்களான சென்னை விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகம், பெரம்பூர் சார்பதிவாளர் அலுவலகம், ஆலந்தூர் சார்பதிவாளர் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகம், பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.
மேலும், வேலூர் மாவட்டம் காட்பாடு, அருகே தமிழக – ஆந்திர எல்லையான கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலகம், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சார்பதிவாளர் அலுவலகம், அவல்பூந்துறை சார்பதிவாளர் அலுவலகம், தருமபுரி மாவட்டம் அரூர் சார்பதிவாளர் அலுவலகம், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.
இவற்றுடன் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகம், அச்சரப்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகம், மயிலாடுதுறை சார்பதிவாளர் அலுவலகம், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகம், காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பெரம்பலூர் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.
இரவுக்கு பிறகும் நடந்த இந்தச் சோதனையில் பல அலுவலகங்களில் கணக்கில் வராத பல லட்சம் பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை விரைவில் விசாரணை செய்யத் திட்டமிட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் உரிய விளக்கத்தை அளிக்காவிட்டால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், துறை ரீதியான நடவடிக்கைக்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்
தமிழக அரசு அலுவலகங்களில் திடீர் ரெய்டு
