• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

மதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை

ByKalamegam Viswanathan

Mar 16, 2025

மதுரை மத்திய சிறையில் ஆண்கள், பெண்கள் தனி சிறை என 2000க்கும் மேற்பட்ட கைவிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை முதல் மத்திய சிறையில் தெற்கு மாநகர் காவல் ஆணையர் தலைமையில் கரிமேடு காவல்துறையினர் சிறைத்துறை காவலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மதுரை மத்திய சிறையில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது சந்தேகிக்கப்படும்படியா எதுவும் கிடைக்கவில்லை என தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.