• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகே மஞ்சு கம்பெனியில் திடீர் தீ விபத்து! தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்..,

ByKalamegam Viswanathan

Oct 14, 2026

சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் உள்ள விக்டர் என்பவருக்கு சொந்தமான மஞ்சு கம்பெனியில் நேற்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனை அடுத்து மஞ்சு முழுவதும் மள மளவென தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததில் அருகில் இருந்தவர்கள் பதட்டம் அடைந்தனர்.

உடனடியாக சோழவந்தான் தீயணைப்புத் துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் நாகராஜன் தலைமையிலான குழுவினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் மஞ்சி கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏராளமான மஞ்சு பொருட்கள் சேதம் அடைந்தது