மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அருகே வெங்கடேஸ்வரா எனும் தனியார் உணவு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை சுமார் 6 மணி அளவில் திடீரென சிமினியில் தீ விபத்து ஏற்பட்டது.

தீ பற்றி எரிவதை கண்ட ஊழியர்கள் உடனடியாக திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையை அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் இவ்விதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இன்று வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் ஒரு அளவுக்கு அதிகமாகவே இருக்கும் காலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது எனினும் தீயணைப்பு வீரர்களின் துரித செயல்பாட்டினால் வெறும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.




