• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கீழக்கரையில் தற்காலிக தூய்மை பணியாளர் திடீர் மரணம், நகர்மன்ற துணைத் தலைவர் சமாதானம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் முத்துசாமிபுரத்தை சார்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி மாரியம்மாள் (வயது 29) தூய்மை பணி செய்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அருகில் இருந்த மற்ற தூய்மை பணியாளர்கள் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்திற்கு காரணம் நகராட்சியில் உள்ள அதிகாரிகளின் அலட்சியப்போக்கே காரணம் என தமிழ் புலிகள் அமைப்பின் மாவட்ட செயலாளர் ரஞ்சித் குமார் தலைமையில் நகராட்சி முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கே வந்த கீழக்கரை காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் சார்பு ஆய்வாளர் மாதவன் ஆகியோர் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து கீழக்கரை நகர்மன்ற அலுவலகத்தில் நகர் மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான், மரணம் அடைந்த பெண்ணிற்கு என்ன உதவிகள் வேண்டுமோ அத்தனையும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களும் சமரச பேச்சு வார்த்தை நடத்தியதன் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.