• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்ட் பரிவர்த்தனையில் திடீர் மாற்றம்… ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்..

Byகாயத்ரி

Jun 22, 2022

பெரும்பாலானோர் பண பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளுக்கு நேரடியாக செல்லாமல் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களை கொண்டு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கதைகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு கூட நெட் பேங்கிங் மூலம் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்துகின்றனர். ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் நீங்கள் ஏதாவது ஒரு முறை உங்களது கார்டு விவரங்களை உள்ளிட்டு பொருட்கள் வாங்கினால் உங்களின் விவரங்கள் அனைத்தும் தானாக சேமிக்கப்படும்.

அடுத்த முறை நீங்கள் பணம் செலுத்த கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரத்தை பதிவிட வேண்டிய அவசியம் இருக்காது. இந்நிலையில் வங்கி வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு மோசடிகளை தடுக்கும் நோக்கத்தில் கூகுள் பே, போன்பே, நெட்ப்ளிக்ஸ் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் கிரீட் அல்லது டெபிட் கார்டு விவரங்களை சேமித்து வைக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த விதிகள் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

அதனால் இனி டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் செய்யும் முறையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இனி இதற்கான பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட டோக்கனை பயன்படுத்தி பரிவர்த்தனைகள் நடைபெறும்.அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களின் அனுமதி பெறாமல் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்க கூடாது என்றும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் டெபிட், கிரெடிட் கார்டுகளில் 16 இலக்க எண்,PIN, கார்டின் வேலிடிட்டி காலம், கார்டு அடையாள எண் போன்ற வாடிக்கையாளர்களின் விவரங்களை ஜூன் முப்பத்தி ஒன்றாம் தேதி முதல் ஆன்லைன் வணிகர்கள் சேமிக்க முடியாது.