• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சாதனை படைத்து வரும் விஜயின் வாரிசு

ByA.Tamilselvan

Nov 4, 2022

பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள விஜயின்வாரிசு பல இடங்களில் இதுவரை இல்லாத விலைக்கு விற்கப்பட்டு வியாபாரத்தில் சாதனை படைத்து வருகிறதாம்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வாரிசு.
இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.அதேபோன்று பல மாதங்களாக அஜித் நடித்துக் கொண்டிருக்கும் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தை வாரிசு படத்துக்கு போட்டியாக களம் இறக்க வேண்டும் என்று அஜித் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் தற்போது பாக்ஸ் ஆபிஸ் நாயகர்களாக இருக்கும் இவர்கள் இருவரின் படங்களும் ஒரே நேரத்தில் வெளியானால் அது கலெக்ஷனுக்கும் சில பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இருவருக்குமே ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.அந்த வகையில் ஒரே நாளில் இந்த படங்கள் மோதும் பட்சத்தில் துணிவு 250 கோடியும் வாரிசு 350 கோடியும் வசூலிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
துணிவு வெளியானல் என்ன, வியாபாரத்தில் தான்தான் மாஸ் என காட்டியுள்ளார் விஜய்!இந்நிலையில் அஜித்தின் துணிவு திரைப்படத்துடன் மோத்தினாலும் வியாபாரத்தில் சாதனை படைத்து வருகிறதாம் வாரிசு. ஆம், வாரிசு திரைப்படம் பல இடங்களில் இதுவரை இல்லாத விலைக்கு விற்கப்பட்டு வருகிறதாம்.