• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை வீதி உலா…

ByKalamegam Viswanathan

Nov 29, 2025

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பு வாய்ந்தது ஆகும். கார்த்திகை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று நடைபெற்றது.

திருவிழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமி- தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். அந்த வகையில் நான்காவது நாளான இன்று மாலை சுப்பிரமணிய சுவாமி தெய்வானை ஆட்டுக்கிடா வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற டிச.2 ந் தேதி இரவு 7.05 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெறும். அதைத்தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக டிச.3 ந் தேதி மாலை 6 மணிக்கு கோயிலில் பாலதீபம் ஏற்றி மலைமேல் மகா தீபம் ஏற்றப்படுகிறது.