• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சரக்கு ரெயில் மோதி சப்-இன்ஸ்பெக்டர் பலி

Byதரணி

Jul 27, 2024

அரக்கோணம் காந்திநகர் திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் ராகவன் (வயது52). இவர் திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

இவர் நேற்று பணிமாறுதல் பெற்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் பணியில் சேர்ந்தார்.

இந்த நிலையில் இவர் நேற்று இரவு ரெயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அப்போது சரக்கு ரெயில் ராகவன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி ராகவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் விரைந்து சென்று ராகவனின் உடலை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ராகவனின் சொந்த ஊரான அரக்கோணத்தில் பணியில் சேர்ந்த அன்றே இரவில் ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.