மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு பகுதியில் ரூபாய் 45 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட துணை சுகாதார வளாகத்தை மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் சிடி. நிர்மல் குமார் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 11:30 மணிக்கு அமைச்சர் வருவதாக கூறப்பட்டிருந்த நிலையில் 12:30 மணி வரை அமைச்சர் வராததால் திறப்பு விழாவிற்கு பின்பு பெண்களுக்கான கிப்ட் பாக்ஸ் வாங்குவதற்காக பத்துக்கு மேற்பட்ட பெண்கள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர். இந்த நிலையில் 12:30 மணிக்கு வருகை தந்த அமைச்சர் ரிப்பன் வெட்டி சுகாதார துணை சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அங்கே கல்வெட்டு இல்லாதது கண்டு அமைச்சர் கடும் அதிருப்தி அடைந்தார். கல்வெட்டிற்கு பதிலாக அட்டையால் செய்யப்பட்ட தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர் அதை கண்டும் காணாமல் திறந்து வைத்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பெண்களுக்கான கிப்ட் பாக்ஸ்களையும் வழங்கி விட்டு வந்தார். நிகழ்ச்சி முடித்து வெளியில் வந்த அமைச்சரிடம் கோயம்புத்தூரில் கைதி தப்பி சென்றது.

குறித்து கேள்வி கேட்க முயன்ற செய்தியாளரிடம் ஐந்து நிமிடத்திற்கு முன்பு தான் இது குறித்து பேட்டி அளித்து விட்டு வந்தேன் என கூறி நழுவினார். தொடர்ந்து கேள்வி கேட்க செய்தியாளர்கள் முயன்ற பதில் சொல்லாமல் தற்போது தான் பேட்டி கொடுத்து விட்டு வந்தேன் எனக்கூறி சென்றார். அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அதிகாரிகளின் இது போன்ற செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் விவாத பொருளாக இருந்தது முறையாக அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்த பின்பு அமைச்சரை அழைத்து வர வேண்டுமென அங்கிருந்தவர்கள் கூறிச் சென்றனர்.