திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும் மின்சார துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் முடித்து வெளியே வந்த போது சாமி தரிசனம் செய்ய வந்த குடும்பத்தினரிடம் நலம் விசாரித்து அவர்களது குழந்தைகளை தூக்கி கொஞ்சினர்.

மேலும் கோயிலுக்கு வெளியே வந்த போது நாமக்கல் தனியார் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் அமைச்சரைக் கண்டு போட்டோ செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதன் பின்பு கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களும் செல்பி போட்டோ எடுத்துக் கொண்டார்

அமைச்சர் சன்னதி தெருவில் உள்ள வியாபாரிகளிடம் நலம் விசாரித்து சென்றார்.
