• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

அசத்தலான AK-61 லுக்! போனி கபூர் ட்வீட்!

அடுத்த வாரம் வலிமை திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அடுத்த படத்தின் உருவாக்கத்தில் களமிறங்கி உள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.

வலிமை படம் எப்படி வந்தாலும் அது ஹிட் தான் அடிக்கப் போகிறது என்பதால், அதன் புரமோஷனை ஒதுக்கி வைத்து விட்டு தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் எச் வினோத் மற்றும் நடிகர் அஜித் குமார் ஏகே 61 படத்தின் ஆரம்ப பணிகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர். நடிகர் அஜித்தின் ஏகே 61 லுக் புகைப்படம் இணையத்தில் கசிந்த நிலையில், அதன் டார்க் ஷேர் போஸ்டரை தற்போது போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

நேர்கொண்ட பார்வை மூலம் இணைந்த தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர்.எச்.வினோத் மற்றும் நடிகர் அஜித் குமார் கூட்டணி வலிமை படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏகே 61 படத்திற்காக இணைந்துள்ளது. அந்த படத்தின் ஆரம்ப பணிகள் ஆரம்பித்து விட்டதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

காதில் கடுக்கன் உடன் நடிகர் அஜித் குமாரின் போட்டோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, ஏகே 61 படத்தில் இந்த கெட்டப் உடன் தான் அஜித் தோன்ற உள்ளார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில், அதன் டார்க் ஷேட் புகைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளார்!

தனக்கு ஒரு இயக்குநர் செட் ஆகி விட்டால், அவரது உழைப்பு நடிகர் அஜித் குமாருக்கு பிடித்து விட்டால் தொடர்ந்து அவருடன் பணியாற்றும் பழக்கத்தை கொண்டுள்ளார். இயக்குநர் சிவாவுடன் தொடர்ந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 4 படங்களில் நடித்த நிலையில், இயக்குநர் வினொத் உடன் 3வது படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் அஜித்.

வாலி, வில்லன், வரலாறு, மங்காத்தா என ஏகப்பட்ட படங்களில் நடிகர் அஜித் நெகட்டிவ் ரோலில் கலக்கிய அஜித், இந்த படம் மங்காத்தாவையே தூக்கி சாப்பிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் ஒரு வாரத்தில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்களை ஒட்டுமொத்தமாக அந்த படத்திற்காகவே ட்யூன் செய்வதை விட்டு அடுத்த படத்தின் மீது கவனம் செலுத்த தயாரிப்பாளர் போனி கபூர் முனைவது ஏன் என்கிற கேள்வியை அஜித் ரசிகர்களே கிளப்பி வருகின்றனர். வலிமை திருவிழா முடிந்த பின்னர் தான் ஏகே 61 பக்கம் திரும்புவோம் என்பதிலும் உறுதியாக உள்ளனர்.