திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற அலுவலகத்தை தமிழ்நாடு சட்ட பேரவை 2024-2026 ஆம் ஆண்டிற்கான குழுத் தலைவர் இ.பரந்தாமன் M.L.A ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா வரவேற்றார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கடந்த 4. ஆண்டுகளகாக பயன்பாட்டில் இல்லாம் இருந்தது. இதற்கு இந்த நிதியாண்டில் சுமார் மொத்தம் 80 லட்சம் ரூபாய் மதிப்பிடு செய்யப்பட்டு இதில் (59 லட்ச ரூபாய் தமிழக அரசு சார்பில் 21 லட்சம் ரூபாய்) எம்எல்ஏ நிதியிலிருந்தும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இந்த ஆய்வு குழு தலைமையில்,
15 எம்எல்ஏக்கள் குழுவில் ஆய்வு செய்தனர் பிறகு திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா அலுவலகத்தில் சென்று பேசினர். பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த குழு தலைவர் பரந்தாமன் MLA (2024-2026 நிதி ஆய்வு குழு தலைவர்)
பேரவை அவைக்குழு இன்றைக்கு மதுரையும் நாளை தேனியும் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக இன்று மதுரை வந்துள்ளோம் அந்த வகையில் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் உள்ள சட்டமன்ற பேரவை உறுப்பினர் அலுவலகம் புதிதாக கட்டித்தர ராஜன் செல்லப்பா அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு வைத்த கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி அலுவலகங்களை புதிதாக கட்டித் தருவதற்காக அரசாங்க ஆணைகளை பிறப்பித்தது.

முதலமைச்சர் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி அலுவலகத்தை ரூபாய் 80 லட்சம் அரசு பொதுப்பணித்துறை சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ( ரூபாய் அரசு நிதியும் 21 லட்சம் ரூபாய் )சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியும் சேர்த்து பொதுமக்கள் பயன்படுகிற வாழ்கையில் அமர்வதற்கான கூடம் சட்டமன்ற உறுப்பினருக்கான தனி அறை மற்றும் இ சேவை மையம் உட்பட1323 சதுர அடி பரப்பில் புதிதாக சட்டமன்ற தொகுதி அலுவலகம் கட்டப்பட இருக்கிறது.
அதனை அவை உறுப்பினர் 15 MLAக்கள் உறுப்பினராகிய நாங்கள் எல்லோரும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அந்த இடத்தை பார்வையிட்டோம். அந்த பழைய கட்டிடத்தை உடனடியாக எடுத்துவிட்டு மிக விரைவில் புதிய கட்டுமான பணி தொடங்குவதற்கு மூன்றிலிருந்து நான்கு மாதத்திற்குள் இப்பணிகள் முடிவடையும் என்று பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
திருப்பரங்குன்றத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி அலுவலகம் கட்டுவதற்கும் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி அலுவலகம் கட்டுவதற்கும், ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம் நாளை தேனி மாவட்டத்திற்கு இதே ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.







; ?>)
; ?>)
; ?>)