

மதுரை காமராஜர் சாலை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள தியாகராசர் கல்லூரியில் அரசு இராஜாஜி மருத்துவமனை இரத்த வங்கியின் சிறப்பு இரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் பாண்டிய ராஜா, இரத்த வங்கி டாக்டர் சிந்தா, சுதர்சன், டான்சாக்ஸ் மாவட்ட திட்ட மேலாளர் ஜெயபாண்டி, நாட்டுநலத் திட்ட அலுவலர் முருகன், இரத்த வங்கி செவிலியர்கள் மனோரஞ்சிதம், ஷமீமா பானு, அட்சுதா மற்றும் ஆலோசகர் ராமசுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இரத்ததானம் செய்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

