மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி ரோட்டில் அமைந்துள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சார்பில் அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளியின் தாளாளரும் சோழவந்தான் நகர அரிமா சங்கர் தலைவருமான எம். வி. எம். மருதுபாண்டியன், அப்துல் கலாம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் மரக்கன்றுகள் நட்டனர். இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாணவ, மாணவிகள் அனைவரும் உறுதிமொழிஎடுத்துக் கொண்டனர் நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள் மணி முத்தையா வள்ளி மயில் முதல்வர் மற்றும் ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.