• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பருவநிலை மாற்றம் குறித்த மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

ByKalamegam Viswanathan

Feb 16, 2023

இயற்கை வளம,பருவநிலை மாற்றம் குறித்து பெருங்குடியில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி பெருங்குடி பகுதியில் தமிழ்நாடு இறையியல் கல்லூரி சார்பில் 4 பள்ளிகளை சேர்ந்த 250 மாணவர்கள் பேர்கலந்து கொண்டனார்.தமிழ்நாடு இறையியல் கல்லூரி முதல்வர் மார்கிரட் கலைச்செல்வி,மதுரை காவல் துணை கண்காணிப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் காத்திகா ஆகியோர் கலந்து கொண்டு வெண் புறாக்களை பறக்க விட்டு விழிப்புணர்பு பேரணியை துவக்கி வைத்தனர்.


இயற்கை வளம் பாதுகாக்க கோரியும் , நெகிழிப்பை பயன்பாட்டை விட்டுவிட்டு துணிப்பையை எடுப்போம் என்றும் வீட்டிற்கு தேவையான 10 மரங்களை வளர்ப்பதினால் தூய்மையான காற்று கிடைக்கும், பொது போக்குவரத்தை பயன்படுத்தி பருவநிலை மேம்படுத்தவும். மின்சாரத்தை சேமிக்க சூரிய சக்திக்கு மாற்றுவோம் என்று மாணவர்கள் பதாகைகளை ஏந்தி உறுதிமொழியற்றனர்.பின்னர் மாணவர்கள் விழிப்புணர்வு பாதாகைகளுடன்விமான நிலைய சந்திப்பிலிருந்து கிளம்பி பெருங்குடி வரை ஊர்வலமாக சென்றனர்.
பருவநிலை மாற்றத்தால் இயற்கை சீரழிவிற்கு காரணமாக உள்ள தொழிற்சாலைகள் பெருக்கத்தால் அதன் கழிவுகளும் அகற்றப்படவும், விவசாயத்தை காப்பாற்றி அதன் மூலம் விஞ்ஞானத்தை பெருக்க வலியுறுத்தி, காடுகளை அழிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் பிரச்சாரம் செய்தனர்.