மாணவி ஸ்ரீமதியின் உடல் அவருடைய சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் இன்று காலை 11 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மாணவி ஸ்ரீமதியின் உடல் அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.எந்தவித இடையூறும் இல்லாமல் ஸ்ரீமதியின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது. இந்த நிலையில், சற்றுமுன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவி ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. . மாணவியின் உடலுக்கு கண்ணீர் மல்க பெற்றோர், உறவினர்கள், கிராமத்தினர் என பலரும் பிரியாவிடை கொடுத்தனர். அக்கா ஸ்ரீமதிக்கு தம்பி இறுதிச்சடங்கு செய்தார்.
மண்ணுக்குள் மறைந்தார் மாணவி ஸ்ரீமதி..!














; ?>)
; ?>)
; ?>)