• Mon. Oct 12th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தலைமை ஆசிரியர் மாணவி ஒருவரை மிரட்டல் விடுத்து திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி..!

ByM.JEEVANANTHAM

Aug 26, 2026

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை பள்ளி தலைமையாசிரியர் இந்திரகுமார் மிரட்டி திட்டியதால் மாணவி இன்று காலை பள்ளியிலேயே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளியில் பணியாற்றிய இந்திரகுமார் என்பவர் பொறுப்பு தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.

இந்திரகுமார் ஜாதி ரீதியாகவும் ஒழுங்கினமாக நடந்து கொள்வதாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததால் பள்ளியில் ஆசிரியர்கள் இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமையாசிரியர் துறைரீதியாக உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த மாதம் விசாரணை மேற்கொண்டனர். ஆசிரியருக்கு எதிராக தலைமை ஆசிரியர் இந்திரகுமார் அறிவுறுத்தலின் பேரில் மாணவிகள் தவறாக புகாரை தெரிவித்தது தெரிய வந்தது. அதிகாரிகள் விசாரணை நடத்திய மாணவிகளை தலைமையாசிரியர் இந்திரகுமார் மிரட்டியதாக கூறப்பட்ட நிலையில் இன்று மிரட்டலுக்கு உள்ளான ஒரு மாணவி பள்ளியிலேயே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதனையறிந்த ஆசிரியர்கள் மாணவியை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் பெற்றொர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலசுப்ரமணியன் நேரில் மாணவி மற்றம் கடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டார்.