• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

பிரபல அசைவ உணவு விடுதிகளில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை..,

ByM.JEEVANANTHAM

Aug 26, 2026

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அதிகாரி டாக்டர் பிரவீன் தலைமையில், உணவு பாதுகாப்புத்துறையினர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பல்வேறு தனியார் அசைவ உணவு விடுதிகளில் சோதனை நடத்தினர்.

அப்போது குளிர்பதன பெட்டிகளில் சமைப்பதற்கு ஏதுவாக நாள்பட்ட பழைய, கோழி மீன், இறால் உள்ளிட்ட அசைவு உணவு பொருட்கள் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக பரிமாறப்படும் இவ்வகை உணவுகள், பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டும், வாளிகளில் தயார் செய்யப்படும் வைக்கப்பட்டிருந்தன.

மேலும் முதல் நாள் சமைத்த பிரியாணி, மற்றும் Fride Rice, பழைய இறைச்சிகள், தடை செய்யப்பட்ட செயற்கை நிறமூட்டிகள், மயானஸ்கள், ஆகியவற்றை கண்டுபிடித்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்,

ஒரு சிறிய லாரி அளவில் இந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பத்துக்கும் மேற்பட்ட பிரபல கடைகளில் ஆய்வு நடத்தியதில், நான்கு கடைகளில் இது போன்ற கெட்டுப்போன உணவுகள் இருப்பது தெரிய வந்தது, அந்தக் கடைகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அதிகாரி உத்தரவிட்டார். மீண்டும் தவறு செய்தால் கடை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அப்போது அவர் தெரிவித்தார்.