• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சுற்றுப்புறச்சூழல் விதியிலிருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க கோரி போராட்டம்

Byகிஷோர்

Nov 26, 2021

சுற்றுப்புறச்சூழல் விதியிலிருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க கோரி மனு கொடுக்கும் போராட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் சுற்றுப்புறச்சூழல் விதியிலிருந்து விலக்கு அளிக்க கோரி வெம்பக்கோட்டை, சாத்தூர், ஏழாயிரம் பண்ணை, தாயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளர்கள் வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் என அறிவித்தனர். இதையடுத்து வெம்பக்கோட்டை பேருந்து நிலையம் முன்பு 500க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் சாலையோரத்தில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பட்டாசு தொழிலாளர்கள் ஊர்வலமாக வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகம் செல்ல முயன்றனர். பின்னர் போலீஸாரால் தடுத்த நிறுத்தபட்ட ஊர்வலம் சிறிது தூரம் சென்று பின்னர் மீண்டும் வெம்பக்கோட்டை மெயின்ரோட்டில் தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு கோஷமிட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வெம்பக்கோட்டை வட்டாட்சியர் தன்ராஜ் மற்றும் அதிகாரிகளிடம் பட்டாசு தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இந்த போராட்டத்தில் பட்டாசு தொழிலாளர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.