இராஜபாளையத்தில் வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலையில் பலத்த காற்று இடியுடன் மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சி காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வந்த பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் கருமேகம் சூழ பலத்த காற்றுடன் இடியுடன் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்து காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் பூமி குளிர்ச்சி அடைந்தது.













; ?>)
; ?>)
; ?>)