விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் முப்பது சதவீதம் வரை வழிகாட்டி மதிப்பை வெளி நபர்களை வைத்து பத்திரப்பதிவு செய்யும் சார் பதிவாளர் கண்டித்து அங்கீகரிக்கப்பட்ட பத்திர எழுத்தாளர்கள் மூணு நாள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என்று அறிவித்திருந்த நிலையில் வழக்கம்போல் செயல்பட்ட சார் பதிவாளர் அலுவலகம் ஒரே நாளில் 15க்கு மேற்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது .

இராஜபாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அனைத்து வகையான நிலங்கள் வீடுகளுக்கு பத்திரப்பதிவு நடைபெற்று வருவது வழக்கம் இதில் 30 சதவீதம் வரை உயர்த்தி பத்திரப்பதிவு செய்வதாக சார் பதிவாளர் மீது வாய்மொழியாக பத்திர எழுத்தர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர் .
இது குறித்து இராஜபாளையம் சார் பத்திரப்பதிவாளர் முத்துச்சாமிடம் கேட்ட பொழுது இராஜபாளையம் நகர் பகுதியில் பத்திர எழுத்தாளர்கள் பலர் உள்ளனர் இதில் சிலர் முறையான ஆவணங்கள் இல்லாத பத்திரங்களை கொண்டு வருவதால் முறையான ஆவணங்கள் வேணும் எனவும் போலி பத்திரங்களை பதிவு செய்ய மறுப்பு தெரிவிப்பதாலும் ஆவணங்களை சரிபார்த்து திருப்பி அனுப்புவதால் தவறான குற்றச்சாட்டை முன்வைத்து ஒரு சில பத்திரை எழுத்தாளர்கள் பொய் புகார்களை கூறி வருவதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை 27.06.2025 மூன்று போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர்.
அதை சார் பதிவாளராகிய நான் குற்றங்களை கண்டுபிடித்து திருப்பி அனுப்பியதால் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற வேலைகளில் ஒரு சில பத்திர எழுத்தாளர்கள் ஈடுபட்டு பத்திரப்பதிவு நடைபெற வில்லை என பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். வழக்கம்போல் இருபதுக்கு மேற்பட்ட பத்திரங்கள் பதியப்படும் இன்று 15 பத்திரங்கள் பதியப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தார்.
பத்திர பதிவுக்காக வந்திருந்த பொது மக்களையும் காண முடிந்தது அவர்கள் கூறும் பொழுதும் பத்திரங்கள் பதிவு நடந்து கொண்டுதான் இருக்கிறது என தெரிவித்தனர்.