• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்..,

ByS. SRIDHAR

May 12, 2025

கட்டுமான பொருட்களின் கடும் விலை உயர்வு கருங்கல் ஜல்லி, எம் சாண்ட் பிசாண்ட் குவாரி, பொருட்கள் என கட்டுமானத்துக்கு தேவையான முக்கிய பொருட்கள் விலை உயர்வால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன.

கட்டட கட்டுமானச் செலவு 15% முதல் 20% வரை உயர்வு, பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன.

பொது மக்களின் வாழ்நாள் கனவு சொந்த வீடு கட்டும் பொருளாதார சுமை கூடிவிட்டது
தமிழக அரசு உடனடியாக தலையிட்டு வரன்முறையற்ற விலை உயர்வை குறைத்து கட்டுக்குள் வைத்து விட வேண்டி மாநிலம் தழுவிய போராட்டம் ஆற்று மணல் குவாரி உடனடியாக திறக்க கோரியும் போராட்டம் நடைபெற்றது.

சிமெண்ட் கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த கட்டுமான பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்கவும். கட்டுமான பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கும் ஆவன செய்யுமாறு விவசாயத்திற்கு அடுத்தபடியாக பெரிய தொழிலாக கட்டுமான தொழில் உள்ளது.

கட்டுமான தொழிலுக்கு உதவும் வகையில் கட்டுமான துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க ஆவண செய்யுமாறு கோரி.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதுக்கோட்டையில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பொறியாளர்கள் சங்க பிரதிநிதிகள் ஒப்பந்தக்காரர்கள். உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள்.