• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடு -தமிழ்நாடு காவல்துறை..!!

ByA.Tamilselvan

Dec 28, 2022

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது.
புத்தாண்டை பொதுமக்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் கொண்டாட தமிழக காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. 31 ஆம் தேதி இரவு பொது இடங்களிலும் சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். புத்தாண்டு நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை புத்தாண்டின் போதும் கடற்கரையில் மக்கள் கடல்நீரில் இறங்கி கொண்டாடக்கூடாது. வீடுகளில் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது. புத்தாண்டை பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நள்ளிரவுகளில் தேவையில்லாமல் பைக்களில் சுற்ற கூடாது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட கூடாது 31ம் தேதி மாலை முதல் சுமார் 90,000 காவல்துறையினர், 10,000 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுவார்கள் என டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.