• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இனி கர்ப்பிணி பெண்களுக்கு வீட்டில் பிரசவம் பார்த்தால் கடும் நடவடிக்கை

Byவிஷா

Nov 22, 2024

இனி கர்ப்பிணிப் பெண்களுக்கு வீட்டில் வைத்துப் பிரசவம் பார்த்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும என தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக சுகாதாரத் துறை தற்போது ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கர்ப்பிணி பெண்களுக்கு இனி வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தால் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கர்ப்பிணி பெண்கள் முறையாக பரிசோதனைக்கு வருகிறார்களா என்பதை கிராம சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் பிரசவம் தரித்த 3 மாதத்திலிருந்து முறையாக மருத்துவ பரிசோதனையில் இருக்க வேண்டும். அவர்களுக்கான மாத்திரைகள் மற்றும் ஸ்கேன் போன்றவைகள் முறையாக கிடைக்கிறதா என்பதை கிராம சுகாதார செவிலியர்கள் உறுதிப்படுத்துவதோடு வீட்டில் வைத்து பிரசவம் பார்ப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும். பிரசவத்தின் போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டால் தாய் சேய் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் வீட்டில் வைத்து யாரும் தேவையில்லாமல் பிரசவம் பார்த்து ஆபத்தை ஏற்படுத்திக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னதாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன்-சுகன்யா (36) தம்பதிக்கு மூன்றாவது முறையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர் வாட்ஸப் குழுவில் வந்த மெசேஜை பார்த்து தன் மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்துள்ளார். இந்த செய்தியை அவர் வாட்ஸப் குழுவில் பகிர்ந்துள்ளார். மேலும் தற்போது தாய்சேய் இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினாலும் இது மிகவும் ஆபத்து என்பதால் தான் இதன் எதிரொலியாக தற்போது சுகாதாரத்துறை இப்படி ஒரு உத்தரவினை பிறப்பித்துள்ளது.