• Sun. Sep 28th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

சுயேட்சையினரை சேர்மன் ஆக்க நினைத்தால் கடும் நடவடிக்கை – அமைச்சர் பி.மூர்த்தி ஆவேசம்

Byகுமார்

Feb 13, 2022

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட பேரூராட்சி பகுதிகளான அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் திமுக நிர்வாகிகளுடனான செயல்வீரர்கள் கூட்டம் வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் அனைத்து வார்டுகளிலும் வெற்றிபெற பாடுபட்டு உழைக்க வேண்டும் என்றார். மாற்று கட்சி மற்றும் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வெற்றிபெற செய்தால் பதவி பறிக்கப்படும் என்றார்

மேலும், அதிமுக ஆட்சியில் பேரூராட்சியில் அதிகளவில் ஊழல் நடைபெற்றுள்ளது. உள்ளாட்சி தேர்தல் முடியட்டும் ஊழல்வாதிகளை வெளிக்கொண்டுவந்து தண்டனை வழங்கப்படும். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை வெற்றிபெற செய்யாமல் சுயேட்சை கட்சிகளை வெற்றிபெற செய்தால் திமுக இருக்க முடியாது நான் இருக்கும் வரை யாரும் திமுகவில் யாரும் இருக்க முடியாது. துரோகிகளை களையெடுத்து விடுவேன்
நகராட்சி, மாநகராட்சி,பேரூராட்சி, அமைச்சர் யாரு நேரு! இங்க நான்தான் நேரு!

நான் தான் எல்லாம் எனவே பணம் வாங்கி கொண்டு சுயேட்சை கட்சிகளை சேர்மன் பதவி பெற நினைத்து கட்சியில் துரோகம் செய்ய நினைத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன். சுயேட்சை கட்சிகளுக்கு எந்த ஒரு வாய்ப்பும் வழங்க கூடாது திமுக தான் வெற்றிபெற வேண்டும் என்றார். மீறுபவர்களை பழிவாங்குவேன் என அமைச்சர் பி. மூர்த்தி எச்சரிக்கை விடுத்து ஆவேசமாக பேசினார்

பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு யார்,யார் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருப்பர் இது மக்களுக்கு நன்கு தெரியும். தமிழகத்தில் முதல்வர் கடந்த 8 மாத காலத்தில் செய்த பணிகளுக்காகவும், சேவைகளுக்காகவும் மக்கள் 100 சதவீதம் வாக்களித்து திமுக வெற்றிபெறும் என்றார்.

சோழவந்தான் தொகுதியில் சேர்மன் பதவியை பாஜக கைப்பற்றும் என பாஜக அண்ணாமலை கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு! பணத்தை கொடுத்து யாரும் வெற்றிபெற நினைத்தாலும் அது நடக்காது திமுக தான் வெற்றிபெறும் என்றார். தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்