• Fri. Feb 14th, 2025

பிரதமரை பாதுகாக்காத அரசு எப்படி மாநிலத்தை பாதுகாக்கும் – அமித் ஷா

மாநிலத்தை எப்படி பாதுகாக்க முடியும் என பஞ்சாப் ஆளும் அரசுக்கு அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் பிப். 20ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள் என அனத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் குதித்து விட்டன. இந்த நிலையில் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் அமித் ஷா பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், பஞ்சாப்பில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கிறது. பஞ்சாப் மாநிலத்திற்கு வந்த நாட்டின் முதலமைச்சருக்கே உரிய பாதுகாப்பு அளிக்காத சரண்ஜித் சிங் எப்படி மாநிலத்தின் பாதுகாப்பை உறுதி செய்யமுடியும்” என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், பஞ்சாப் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் போதை பொருட்களை ஒழிக்க தனிக் குழு அமைக்கும் என்று பேசினார்.

தேசிய தியாகிகள் தினத்தில் பங்கேற்கவும், பல முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் மோடி கடந்த மாதம் 5ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
ஹெலிகாப்டர் வாயிலாக திட்டமிடப்பட்ட இந்த பயணம் வானிலை நிலவரம் காரணமாக சாலை வழியாக மாற்றப்பட்டது. இந்த பயணத்தின் போது சில போராட்டக்காரர்கள் திடீரென பிரதமரின் காரை இடைமறித்தனர். இதனால் பிரமரின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டது.

சாலையில் சென்று கொண்டிருந்த பிரதமரின் கார், மேம்பாலத்திலேயே 20 நிமிடம் வரை நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த ஆண்டு நடந்த இந்த சர்ச்சை நாடு முழுவதும் பேசுபொருளானது. இதனை குறிக்கும் வகையில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட அமித் ஷா பேசியுள்ளார்.