• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

புட்போர்டில் பயணித்தால் கடும் நடவடிக்கை

Byகாயத்ரி

Dec 8, 2021

அரசு பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.


பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் அரசு பேருந்துகளில் மாணவர்களின் பயணம் தொடங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் மாணவர்கள் படிகட்டில் நின்றும், மேற்கூரையில் ஏறியும், படிகட்டில் சாகசம் செய்து பயணிக்கின்றனர். அண்மையில் மாணவியும் இதுபோன்று பயணம் செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த நிலையில், ஓட்டுநர், நடத்துநர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை அரசு போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. அது குறித்து அரசு போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அரசு பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தணிக்கையாளர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது மாணவர்கள் படிக்கட்டு பயணத்தை முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பான முறையில் பேருந்தில் ஏறி இறங்குவதை உறுதி செய்த பின்பே பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்தில் போதிய இடவசதி ஏற்படுத்தி கொடுத்து படிக்கட்டில் நிற்காதாவாறு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் படிகட்டிகளில் நின்று பயணம் செய்யாதவாறு
ஓட்டுனரும்,நடத்துனரும் பணியாற்ற வேண்டும். மாணவர்கள், மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், கூடுதல் பேருந்துகளை இயக்க ஏதுவாக உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும் என போக்குவரத்துதுறை தெரிவித்துள்ளது.படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் விபத்தில் சிக்குவதை தடுக்க போக்குவரத்துதுறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.