• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அரசு பஸ் மீது கல்வீச்சு: போலீஸார் தடியடி…

ByN.Ravi

Feb 27, 2024

கரூரில் கொலை செய்யப்பட்ட ராமர் பாண்டியன் உடல் இறுதி ஊர்வலம் மதுரை சிந்தாமணி 4 வழி சாலையிலிருந்து திரும்பும் போது, ஊர்வலத்தில் வந்த சிலர் அரசு பேருந்து மீது கல் வீசி தாக்குதல் நடைபெற்றது.
பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து, சொட்ட தட்டி சென்ற 47 எண் பேருந்து சிந்தாமணி அருகே சென்ற போது, ராமர் பாண்டியன் உடல் இறுதி ஊர்வலத்தில் வந்த நபர்கள் கல் வீசி தாக்குதலில் அரசு பேருந்தின் முன்பக்க , பின் பக்க கண்ணாடிக் சேதமடைந்தது. இதனை தொடர்ந்து, போலீஸார் கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.