மதுரை மாவட்டத்தில் மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக ரூ.342.26 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 6 கட்டடங்களை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் இருந்து மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு.மா. சுப்பிரமணியன் காணொளி காட்சி மூலம் நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், மாநகராட்சி மேயர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர், மாநகராட்சி துணை மேயர் உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.