• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க விழா!!

BySeenu

Jun 23, 2025

கோவையில் உள்ள அலுவலகத்தில் முன்பாக கட்சி கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 17 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கோவையில் இரத்த தான முகாம், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முன்னதாக கட்சி அலுவலகம் முன்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் மத்திய மாவட்ட தலைவர் முகம்மது இஷாக் தலைமை தாங்கி கட்சி கொடியேற்றினார்.
மாவட்ட துணை தலைவர் சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெற்றது. தொடர்ந்து ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

விழாவில், மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா உசேன், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் இப்ராஹிம் பாதுஷா , SDTU மாநில பொதுச் செயலாளர் ரவூஃப் நிஸ்தார், வர்த்தக அணி மாநில செயலாளர் அப்துல் கரீம் , மாவட்ட துணைத் தலைவர் அப்துல் ரஹீம், மாவட்ட செயலாளர்கள் உமர் ஷரீஃப், அனீப்கான் அபுதாஹிர், காமிலா பானு மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அப்துல் காதர், முகமது இக்பால், ஷானவாஸ், மாநில பேச்சாளர் அபுதாஹிர் மற்றும் பல்வேறு நிலை நிர்வாகிகள் செய்யது இப்ராஹிம் பசீர், அப்பாஸ், நூருல்லா மாமன்ற உறுப்பினர் ,அலிமா ராஜா உசேன்,முன்னாள் கவுன்சிலர் முஹம்மது சலீம், அன்சர் ஷரீஃப், பட்டறை முஸ்தபா பீர் முகமது அனீஸ் ரஹ்மான் முஹம்மது அசார், ஃபைரோஸ், ஷாஜகான் அப்துல்லா, நாசர், முகமது காசிம் , ஜாபர் சாதிக், தாஜுதீன் ஆஷிக் இக்பால்
அமீர் அப்பாஸ், அப்துல் ரஹீம், அபுதாஹீர் மற்றும் தொகுதி வார்டு கிளை நிர்வாகிகள் ,
SDTU தொழிற்சங்கம் வர்த்தகர் அணி, விமன் இந்தியா, மூவ்மெண்ட் மற்றும் துறை அமைப்புகளின் மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.