தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவண தலைவர் தெய்வத்திரு பத்மபூசன் கேப்டன் அருள் ஆசியுடன், கழக பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் ஆணைக்கிணங்க வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தல், பூத் கமிட்டி தொகுதி பொருட்பாளர்கள் அறிமுகம் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் சிங்கை k.சந்துரு தலைமையிலும், மாவட்ட கழக நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மேற்கு மண்டல தேர்தல் பொருட்பாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ்(EX MLA), மண்டல தேர்தல் பணி பொருட்பாளர் கணேசன், கோவை மாநகர் மாவட்ட தேர்தல் பொருட்பாளர் விஜய் வெங்கடேஜ், மாவட்ட அவைத்தலைவர் பொன்னுராஜ்,மாவட்ட பொருளாளர் ராகவலிங்கம், மாவட்ட கழக துணை செயலாளர்கள் கோவிந்தராஜ், பழனி கற்பகம், ஜெயக்குமார், கருப்புத்துரை, தேவராஜ், பிரபு, பாக்ஸ் மூர்த்தி, விருப்பாச்சி சண்முகம், பகுதி செயலாளர்கள் அழகர்
செந்தில், பன்னீர்செல்வம், சரவணக்குமார், செல்வம், தொழிற்சங்க செயலாளர் நீ.நா வேலுச்சாமி, மணிகண்டன், மகளிர் அணி தனலட்சுமி, அருணா கலந்துகொண்டனர். முன்னதாக கழக கொள்கை பரப்பு செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,
மண்டல தேர்தல் பொறுப்பாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் Ex.Mla கலந்து கொண்டு பேசிய போது.., பூத் கமிட்டி அமைப்பது சம்பந்தமாகவும், கழக அமைப்புகளை வலுப்படுத்துவது சம்பந்தமாகவும், ஜனவரியில் நடைபெறும் மாநாடு சம்பந்தமாகவும் ஆலோசனை வழங்கினார்.
மேலும், இந்த கூட்டத்தில் மாவட்ட அணி நிர்வாகிகள், மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்ட செயலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.