அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப கழிப்பறைகள் இல்லாததால் திறந்தவெளியில் மாணவர்கள் பயன்படுத்தும் அவல நிலை,உள்ளது.
மாநகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு பயன்பாடு இல்லாமல் முட்புதர்கள் மண்டி கிடக்கும் சமுதாய கழிப்பிடங்களை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மக்கள் நலனில் அக்கறை இல்லாத திமுக அரசில் அங்கம் வகிக்கின்ற இரண்டு அமைச்சர்கள் உள்ள மாவட்டத்தில் பள்ளிகளில் குறைந்தபட்சம் அடிப்படை வசதியான கழிவறை வசதிகளை கூட செய்து தர முடியாத அவல நிலை உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1150 அரசு பள்ளிகள் இயங்கி வருகிறது. அரசு பள்ளிகளில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிதியின் கீழ் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. பெரும்பாலான பள்ளிகளில் போதிய அளவு கழிப்பறைகள் இல்லாததாலும் கழிப்பறைகளுக்கு தேவையான தண்ணீர் வசதி இல்லாமல் உள்ளது மேலும் அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை தூய்மைப்படுத்துவதற்கு தூய்மை பணியாளர்கள் பணியில் அமர்த்தபடாததால் கழிவறைகள் பராமரிப்பின்றி உள்ளது.
குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா வேலாடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதுமான கழிவறைகள் இல்லாததால் மாணவர்கள் திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்ற அவல நிலை உள்ளது மேலும் அண்டக்குளம் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் போதுமான கழிவறைகள் இல்லாததால் மாணவர்கள் திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்றனர் இதேபோல் மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு உயர் துவக்கப்பள்ளியில் (நகர்மன்றம் அருகில்) போதுமான அளவு கழிவறைகள் இல்லாததால் மாணவ மாணவியர்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். அதேபோல் புதுக்கோட்டை ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவியர்கள் கல்வி பயின்று வரும் பள்ளியில் மாணவியர்கள் போதுமான கழிவறைகள் இல்லாததால் மாணவிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இதேபோல் மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் கழிவறைகளுக்கு போதுமான தண்ணீர் வசதி இல்லாமல் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக பள்ளிகளில் ஆய்வு செய்து மாணவ மாணவியர்களுக்கு கழிவறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். அதேபோல் பள்ளிகளில் தூய்மை பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். தொடர்ந்து மாநகராட்சி பகுதியான கூடல் நகர், மலையப்பா நகர், வட்டாபட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டப்பட்டுள்ள சமுதாய பொதுக் கழிப்பிடங்கள் தண்ணீர் வசதி இன்றியும் தூய்மை பணியாளர்கள் பணியாமர்த்தப்படாததால் பொதுமக்கள் பயன்பாடு இன்றி முட்புதர்கள் மண்டி சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது.
அதேபோல் பெரும்பாலான ஊராட்சிகளில் மத்திய அரசு நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள சமுதாய கழிப்பிடங்கள் பொதுமக்கள் பயன்பாடு இன்றி முட்புதர்கள் மண்டி உள்ளது. அதனையும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் திமுக அரசில் அங்கம் வகிக்கின்ற இரண்டு அமைச்சர்கள் கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளில் குறைந்தபட்சம் மாணவர்களுக்கு கழிப்பறை வசதிகளை கூட செய்து தர முடியாத அரசாக உள்ளது என்பது வேதனைக்குரியதாக உள்ளது .
இவ்வாறு மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.